Top News

சிந்தித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என ரஜினி மீது சீற்றம்: மு.க.ஸ்டாலின்

சென்னை கோவளத்தில், குடியுரிமை சட்டத்தால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களையும்கொடுமைகளையும் ரஜினிகாந்த் தெரிந்துகொள்ளவில்லை என்பது தான் மிகுந்த வருத்தமளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரஜினி கருத்து குறித்து கோவளத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் விமர்சனம் கூறியிருந்தார்.குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அதை வைத்து பீதி கிளப்பப்படுவதாகவும் ரஜினி பேட்டியளித்த நிலையில் ஸ்டாலின் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் குடியுரிமை சட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து ரஜினிகாந்த் சிந்திக்க வேண்டும் என்றும் இது குறித்து ஆய்வு செய்து அவர் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கையெழுத்து இயக்கம் குடியுரிமை சட்டத்தை கண்டித்தும் அதனை திரும்பபெற வலியுறுத்தியும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டம் குறித்து ரஜினிகாந்த் சிந்தித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மு.க. ஸ்டாலின்தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் குடியுரிமை சட்டத்தால் முஸ்லீம்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை சில அரசியல் கட்சிகள் பீதி கிளப்புகின்றன எனவும் கூறியிருந்தார். இது அவர் மறைமுகமாக திமுகவை விமர்சித்து சூசகமாடி சாடியுள்ளார் என்று கூறப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் நடிகர் என்றும் அவருக்கு அரசியல் தெரியவில்லை எனவும் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் சென்னை கோவளத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்க சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ரஜினிகாந்த் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர் அதற்கு பதிலளித்த ஸ்டாலின் குடியுரிமை சட்டத்தில் இடம்பெற்றுள்ள கொடுமைகளை ரஜினிகாந்த் தெரிந்து கொள்ளவில்லையே என்பதை நினைக்கும் போது தமக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது எனத் தெரிவித்தார். சி ஏ ஏ-வில் உள்ள கஷ்ட நஷ்டங்களை ரஜினி அறிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். குடியுரிமை சட்டம் விவகாரத்தில் மாணவர்களை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் எனக் கூறும் ரஜினிகாந்த் இந்தச் சட்டத்தின் பாதிப்பு குறித்து அவர் சிந்தித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மு.கஸ்டாலின் கூறினார் குடியுரிமை சட்டத்தில் இருக்கும் பாதகங்களை ரஜினிகாந்த் அவரது கருத்தை  மாற்றிக்கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக கூறினார்.


Post a Comment

புதியது பழையவை