விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில்(சிங்கபுரம்) பல்லவர் கால குடைவரை கோயில்களில் ஒன்றான செஞ்சியை ஆண்ட ராஜாதேசிங்கு மன்னரின் குலதெய்வமாக வழிபட்ட அருள்மிகு ஸ்ரீஅரங்கநாதர் திருக்கோயிலில் தைமாத வளர்பிறை ஸப்தமி முன்னிட்டு ரதசப்தமி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழாவில் சூரிய பிரபை,சேஷவாகனம்,பெரிய திருவடியெனும் கருடசேவை குதிரை வாகனம், திருமஞ்சனம் எனும் சிறப்பு அலங்காரம் சிரிய திருவடியெனும் அனுமந்த வாகனம், யானை வாகனம் மற்றும் சந்திர கிருபை ஆகிய வாகனங்களில் விழா நாயகன் எம்பெருமான் ஸ்ரீஅரங்கநாதர் சமேத ஸ்ரீதேவி பூதேவிக்கு சிறப்பு அலங்காரத்துடன் கங்கா மண்டபம் எனும் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். திரளான பக்த்தர்களின் கோவிந்தா கரகோசத்துடன் மங்கள வாத்தியம் இசைக்க தீப ஆராதனை ஏற்றப்பட்டது. எம்பொருமான் உற்சவ மண்டபத்திலிருந்து. (தேரடிவீதி) மாடவீதி வழியாக கோலாட்டம் மற்றும் பஜனையுடன் உற்சவமூர்த்தி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்
கருத்துரையிடுக