விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட பட்ஜெட்டில் மானியங்கள் ரத்து
விவசாய துறைக்கான எந்தெந்த இனங்களுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படும் என்பதை கடந்த ஆண்டுகளில் தெளிவாக அறிவித்து வந்த நிலையில் சமர்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் இன்று ஒட்டு மொத்தமாக 3 லட்சம் கோடி என அறிவித்திருப்பது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். நதிநீர் இணைப்பு பற்றி தெளிவான பார்வை இல்லாத பட்ஜெட்டாக இது இருக்கிறது,
குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கி வந்த கடனை குறைத்திருப்பது விவசாயத்தை அழிக்கும் செயல். விவசாயிகளுக்கு இது மத்திய அரசு செய்கின்ற துரோகம், இந்த மானியம் பற்றி தெளிவான பார்வையும் இல்லாமல் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. இந்த பட்ஜெட்டில் புரிதல் தன்மையும் இல்லை, நதிகளை இணைப்பதன் மூலம் விவசாயம் பெருகும் என கூறி வந்த பாரதிய ஜனதா கட்சியின் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதிலிருந்து விவசாயிகளுக்கு எந்தவித சலுகைகளும் எதிர்காலத்தில் கிடைக்காதது போல் தோன்றுகிறது
20 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் சூரிய சக்தியில் இயங்கும் மின் மோட்டார்கள் வழங்கப்படும் என அறிவித்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு மிகவும் குறைவானது, 15 லட்சம் பேர் மட்டுமே விவசாயத்திற்கான மின் இணைப்பு பெற காத்திருக்கிறார்கள்
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் 20 லட்சம் என்பது மிக சொற்பமான இலக்கு.தண்ணீர் பற்றாக்குறை மிகுதியாக உள்ள பல மாநிலங்கள், தமிழக மாநிலம் போன்ற விவசாயிகளுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. இந்த பட்ஜெட் பற்றியான பெருமையாக கூற எந்த விஷயமும் இல்லைவிவசாயிகளுக்கு வஞ்சகத்தை இந்த பட்ஜெட் ஏற்படுத்துகின்ற பட்ஜெட் என்றார்கள் விவசாயிகள்.
கருத்துரையிடுக