கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு


இந்தியா முழுவதும் கொரானா தொற்று நோய் வராமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவந்தன.


கொரானா நோயை முழுமையாய் தடுக்க மக்களை ஒன்று சேரவிடாமல் தடுத்தால் கொரானாவை விரட்டமுடியும் மருத்துவர்களின் ஆலோசனைபேரில் மக்களின் பாதுகாப்பு கருதி மத்திய அரசும் மாநில அரசும் இன்று ஒருநாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.


இதனால் அனைத்து கடைகள், வணிகவளாகங்கள், பேருந்துகள் இயக்கபடவில்லை. செஞ்சியில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரு சில இறைச்சி கடைகள். மீன் மார்கெட்டுகள் இயங்கின. மக்களின் பாதுகாப்பு கருதி செஞ்சி காவல் நிலையத்திலிருந்து 3 உதவி ஆய்வளர்களும் 27 காவலரும் பாதுகாப்பு பணில் இருந்தனர்.


Post a Comment

புதியது பழையவை