நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கத்தை கட்டுபடுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது..
144 தடைஉத்தரவால் கடைகள் முடப்பட்டுள்ளன அத்தியாவசிய பொருட்கள் விற்க்கும் பால் கடைகள், காய்கறி கடைகள், ,மருந்து கடைகள் ஒரு சில இறச்சி கடைகள் இயங்கிவருகின்றன,
செஞ்சி காந்திபஜார், நான்குமுனை சந்திப்பு,, பேருந்து நிறுத்தம் ஆகியவை வெறிச்சோடி காணப்படுகின்றன
செஞ்சி நான்கு முனை சந்திப்பில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நபர்களை தவிர வேறு ஆட்களை காவல்துறைனர் அனுமதிப்பது கிடையாது.
செஞ்சி முழுவதும் கண்காணிப்பிற்க்கா 1 துணை கண்காணிப்பாளர் 3. காவல் ஆய்வாளர், 8 உதவி காவல் ஆய்வாளர், 75 காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
அனைத்து பொதுமக்களும் அதிகமாக வெளியில் நடமாடாமல் வீட்டிலிருந்து கொரோனோ வைரஸ் பரவாமல் கட்டுபடுத்த ஒத்துழைப்பு தருமாரு தமிழக அரசு கேட்டுகொண்டுள்ளது.
கருத்துரையிடுக