விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் செஞ்சி கோட்டை நீர் ஆதாரம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு சங்கத்தினரால் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் கபசுர கஷாயம் வழங்கப்பட்டது. இந்த கஷாயத்தை பொதுமக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள விரும்பி குடித்தனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது. இந்நிலையில் அத்தியாவசி பொருட்கள் தங்கு தடை இன்றி கிடைக்கும் என வெளியான நிலையில் செஞ்சி காந்திபஜாரில் இயங்கி வரும் இறச்சிகடைகளில் கூட்டம் காணப்பட்டது இதனால் இந்த இறச்சி கடைகளை காந்திபஜரில் இருந்து செஞ்சி சந்தைமேடு வாரசந்தை மைதானத்திற்க்கு மாற்றும் படி காவல்துறை துணை கண்காணிப்பாளர் நீதிராஜ் அறிவுரித்தினார் அதன் பேரில் ஒரு சில கடைகள் மட்டுமே அங்கு இயங்குகின்றன..
ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் செஞ்சியில் அத்தியாவசியமற்று இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களை போக்குவரத்து காவல்துறையினர் பிடித்து அவர்களுக்கு நுதன உடற்பயிற்ச்சி கொடுத்து கொரோனா தொற்று விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
நாடுமுழுவதும் 21 நாள் ஊரடங்கு பிறப்பித்த நிலையில் தமிழக அரசு கொரோனா சிறப்பு நிவாரணம் ரூ 1000-ம் விலையில்லா உணவுபொருட்கள் அறிவித்த நிலையில் செஞ்சி மற்றும் செஞ்சி சுற்றியுள்ள நியாய விலைகடைகளில் இன்று(02-04-2020) வழங்கப்பட்டது மக்கள் சமுக இடைவெளி பின்பற்றி ரூ 1000-ம் மற்றும் விலையில்லா உணவுபொருட்களை வாங்கிச்சென்றனர்.
செஞ்சி சக்கராபுரம் புதியகாலனி மற்றும் பீரங்கிமேடு பகுதியில் இயங்கிவரும் நியாய விலைகடைகளில் சமுக இடைவெளி பின்பற்றாமல் உணவுபொருட்கள் வாங்கிசெல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமுக ஆர்வளர்கள் கூறுகின்றனர் காவல்துறை கண்கானிக்குமா?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்காவை சேர்ந்த தையூர் கிராமத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கிராம இளைஞர்கள் கிராமம் முழுவதும் கிரிமிநாசினி தெளித்தனர்.
கருத்துரையிடுக