Top News

அமுதம் செய்தி சுருக்கம்


செஞ்சி செய்திகள்


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உட்கோட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்றுநோய் பரவாமல்  பாதுகாப்புடன் பணியாற்ற மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் S.ஜெயகுமார் IPS அவர்களால் கை உறை, கோட் ,முககவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது இந் நிகழ்ச்சியில் செஞ்சி காவல்துறை துணைகண்காணிப்பாளர் நீதிராஜ், காவல் ஆய்வாளர் சீனிவாசன், காவல் உதவி ஆய்வாளர் சங்கரசுப்பரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.


தென்காசி செய்தி


மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின்  தென்மண்டல ஒருங்கினைப்பாளர் முனைவர் கணபதி சுப்பரமணியம் முன்னிலையில் மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் தொன்காசி மாவட்ட செயலாளர்  புண்ணையாபுரம் மா.மகேஷ் அவர்களால்  ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு  கொரோனா பாதிப்பின் கீழ் / வேளையில்லா விவசாயிகளின் நலன் கருதி  15 அரிசி கிலோ, மளிகைபொருட்கள் , மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.


விழுப்புரம் மாவட்ட செஞ்சி


மத்திய மாநில அரசுகள் கொரோனா நோய்தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு பிறப்பித்து 40 நாள் கடந்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டிற்க்கு வரவில்லை . இதனால் மீண்டும் 17 நாள் ஊரடங்கு நீட்டிக்கபட்டதால் மக்களின் வாழ்வாதரம் பாதிக்கபட்டுள்ளது. இந்நிலை அறிந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில்  விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல்தொழில் நுட்ப அணியின் சார்பாக செஞ்சி பேரூராட்சி 7 வது வார்டில் வசிக்கும் 500 குடும்ப அட்டைதாரகளுக்கு தலா 5 கிலோ அரிசி செஞ்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் K.S.மஸ்தான் அவர்களால் வழங்கப்பட்டது. மக்கள் சமுக இடைவெளி பின்பற்றியே வாங்கி சென்றனர்.


          அம்பத்தூர் செய்தி


திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டை ரயில்வே நிலையத்தில்/ சுமார் ஆயிரகணக்கான பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடியுள்ளனர்


இது குறித்து விசாரித்தபோது  இவர்கள் இங்கு தங்கி வேளைபார்த்து வந்தவர்கள் என தெரிய வந்தது கடந்த இரண்டு மாதகாலமாக தங்கும் இடம் உணவு இன்றி தவித்துவருவதாக  தெரியவந்தது  தற்போது மத்திய அரசு அறிவித்த தகவிலின்படி  சொந்த ஊரான பீகார் மாநிலத்திற்கு செல்ல ரயில் முன்பதிவு செய்ய . கூடி இருப்பதாக தெரிவித்தனர் அப்போது அவர்கள் சமுக இடைவெளி பின்பற்றாமலும் முககவசம் அணியாமலும்  இருந்த அனைவரையும் காவல்துரையினர் அப்புரபடுத்தினர்.


Post a Comment

புதியது பழையவை