Top News

உழைப்பாளிகளுக்கு மே தின நல்வாழ்த்துக்கள்

அடிமைகளாய் 18 மணி நேரம் உழைத்து ஓடாய் போன உழைப்பாளர்களின் தினம் இன்று பல போராட்டத்திற்க்கு பிறகு 8 மணிநேர வேளை என்ற எட்டா கணியை பறித்த தினம் மே 1



அழுக்காய் இருக்கும் நம் ஆடையை தன் அயராத உழைப்பை தந்து வெள்ளையாய் வெளுத்து மிடுக்கென நடை போடசெய்யும் சலவை தொழிலாளி தினம் இன்று


நம்மை பாதுகாப்பாய் வைத்துகொள்ள சிறு சலனம் இல்லாமல் சாக்கடை சுத்தம்செய்யும் உழைப்பாளி தினம் இன்று


நம் சுற்று சூழல் பாதுகாப்பாய் இருக்க தினம் தெருக்களில் கொட்டும் குப்பைகளை முகம் சுளிக்காமல் கைகளால் அள்ளி சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள் தினம் இன்று


நம் கால்களை கவனமாய் பார்த்துகொள்ளும் செருப்பு தைக்கும் தொழிலாளி தினம் இன்று


நம் எண்ண கனவுகளை வண்ணமயமாக்கி தன் உடலை வறுத்தி சுகமாய் நீ வாழ கட்டிடம் கட்டும் கட்டிட தொழிலாளி தினம் இன்று


நம்மை அழகாய் மாற்றி கம்பிரமாய் மிளிர செய்யும் முடிதிருத்தகர் தொழிலாளி தினம் இன்று


உடம்மை இரும்பாக்கி உழைப்புக்கு உரமிட்டு நம்மை பாதுகாப்பாய் உலகத்தை இயங்க செய்யும் நாட்டின் முதுகெலும்பான உழைப்பாளர் தினம் இன்று


அனைத்து உழைப்பாளிகளுக்கும் அமுதம் ரிப்போர்ட்டரின் உலக உழைப்பாளர் தின நல் வாழ்த்துகள்


நாம் அனைவரும் அவர்களை போற்றுவோம்! பேணிகாப்போம்!!


Post a Comment

புதியது பழையவை