தமிழ்நாட்டில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவலை குறைக்க தேவையான கட்டுப்பாடுகளுடன் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19 ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில் மாநிலத்தின் கொரோனா நோய் தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களில் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, *திரையங்குகள், மதுக்கூடங்கள், உயிரியல் பூங்கா, நீச்சல் குளங்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை தொடர்கிறது.
*ஐடிஐ போன்ற தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு பயிற்சி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன் செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது.
*ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கை, புத்தகங்கள் வழங்குதல், பாடத்திட்டம் தயாரிப்புகளுக்காக பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளது.
*சமுதாயம், அரசியல் கூட்டங்கள் பொழுதுபோக்கு விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.
*புதுச்சேரி நீங்களாக மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தொடரும் என அரசு அறிவித்துள்ளது.
*மக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
கருத்துரையிடுக