Top News

நினைத்த இடத்தில் நித்திய வாசம் செய்யும் குப்பைக் கழிவுகள், குப்பைக் கழிவுகளைக் கொண்டு ஆற்றங்கரையை பலப்படுத்தும் சிறப்பு பேரூராட்சி செஞ்சி!

நாடெங்கிலும் கொரோனா எனும் பெருந்தொற்று தற்போது இரண்டாம் அலை வீசிக்கொண்டு இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் மாதத்தில் மூன்றாம் அலை வீசக் கூடும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு முயற்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் செஞ்சி பேரூராட்சியால் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பை உருவாக்கி வருகிறது செஞ்சி பேரூராட்சி நிர்வாகம். செஞ்சி நகர்ப் பகுதிகளில் சேகரிக்கும் குப்பைக் கழிவுகளை செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் நினைத்த இடங்களில்

பள்ளிக்கு அருகாமையிலும், ஏரிக்கரை பகுதியிலும், ஆற்ரங்கரையிலும், இடுகாட்டுப் பகுதியிலும், சாலையோரங்களிலும் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகிறது. அது மட்டுமல்லாது தனி நபர்களால் துர்நாற்றம் வீசக்கூடிய குப்பைக் கழிவுகள்  கொட்டுவதற்கு வழிவகை செய்துவருகிறது செஞ்சி பேரூராட்சி நிர்வாகம். இதனால் அவ்வழியாக கடக்கும் மக்கள் நோய் தொற்றுக்கு ஆலாகிவிடுவோமோ என மிகுந்த அச்சத்துன் கடந்து செல்கிறார்கள். ஆறு,ஏரி பகுதிகளில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் நீர் மாசுபாடுவதோடு மட்டும் அல்லாது தாகத்திற்காக அந்நீரை அருந்தும் கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன மேலும் அந்த நீரானது விவசாயத்திற்கு பயன்படுத்தப் படுவதால் விவசாய பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இடுகாட்டு பகுதியில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் மரணித்தவர்களை இடுகாட்டு பகுதியில் மிக மன உளைச்சலுடன் புதைக்கின்றனர். 

மேலும் சாலையோரங்களில் குப்பைக் கழிவுகளை தீயிட்டு கொளுத்தி விடுவதால் சாலையில் புகை மண்டலமாக காணப்படுவதால் அவ்வழியாக வாகனங்களில் பயணம் செய்பவர்கள் விபத்துக்குள்ளாக அதிகம் வாய்ப்புள்ளது.  செஞ்சி பகுதியில் குப்பைக்கழிவுகளுக்கு நிரந்தர தீர்வுகான வேண்டி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  பலமுறை பேரூராட்சியிடம் புகார் மனு கொடுத்தும், சமூக வலைத்தளங்களிலும், பத்திரிகைகளில் செய்திகள் வெளியிட்டும், ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியிட்டாலும் செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் உரிய தீர்வு காணாமல் வெரும் கண்துடைப்பு செயல்களில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. இதனால் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் செஞ்சி பேரூராட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தியும் அச்சமும் கொண்டுள்ளனர். செஞ்சி பகுதியில் வாழும் மக்களின் அதிருப்தியையும், அச்சத்தையும் போக்க குப்பைக் கழிவுகளால் பாதிப்பு ஏற்படாமலிருக்க  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் மற்றும் சமூக ஆர்வளர்களின் நிரந்தர கோரிக்கையாக உள்ளது.   

செய்தியாளர்;   த.மதியழகன்

Post a Comment

புதியது பழையவை