Top News

காவல்துறையினர் இனி கட்டாயம் அரசு பேருந்துகளில் பயணச் சீட்டு எடுக்க வேண்டும்! டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு.

 தமிழகம் முழுவதும் காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக பயணச்சீட்டு எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் காவல்துறையினர் பயணச்சீட்டு வாங்காமல் இலவசமாக பயணம் மேற்கொள்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இதனால் பயணச்சீட்டு வாங்கும் படி கூறும் நடத்துனர் மற்றும் காவல்துறையினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு திருச்சியில் நடத்துனர் ஒருவர் காவல்துறை அதிகாரியிடம் பயணச்சீட்டு வாங்கும்படி கேட்டதற்கு எடுக்க முடியாது என கூறி நடத்துனரை தாக்கியதால் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மாநில மனித உரிமை ஆணையமும் இதற்கு விளக்கம் அளிக்க சொல்லி நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து பேருந்துகளில் காவல்துறையினர் இலவசமாக பயணிக்கலாம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட கேள்விக்கு காவல்துறையினருக்கு தமிழக அரசுப் பேருந்துகளில் சிறப்பு சலுகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லை. அதே போல தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் பணி காரணம் தவிர தன்னுடைய சொந்தத் தேவைக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தால் கண்டிப்பாக பயணச்சீட்டு பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் பணி காரணமாக செல்லும்போதும், பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போதும் பேருந்துப் பயண அனுமதி வாரண்ட் பெற்றுத்தான் அரசுப் பேருந்தில் பயணிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அப்படி பயணம் செய்யும்போது பயணச்சீட்டு பெறத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் தற்போது புதிதாக பதவி ஏற்று இருக்கும் மாநில சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மாநில மனித உரிமை ஆணையத்தின் வழக்குகளை மேற்கோள் காட்டி அனைத்து காவல் நிலையத்திற்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது கண்டிப்பாக அனைவரும் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

புதியது பழையவை