Top News

வரலாற்று சிறப்புமிக்க செஞ்சியில் தேசிய புத்தக கண்காட்சி!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேஷனல் புக் டிரஸ்ட்(இந்தியா புதுதில்லி), தமிழ்நாடு அரசு கிளை நூலகம் செஞ்சி மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் இணைந்து நடத்தும் 35-வது தேசிய புத்தக கண்காட்சி இன்று (30/07/2021) தொடக்க விழா நடைபெற்றது. 



விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலர் திரு இரா.சுப்பிரமணியன் அவர்கள் இப்புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்தார் புத்தக கண்காட்சியில் அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம், வே.இறையன்பு அவர்களின் ஏழாவது அறிவு, நிர்மால்யாவின் மகாத்மா அய்யன்காளி, கலைஞரும் இலக்கியமும், பழ.நெடுமாறனின் காலத்தை வென்ற காவிய நட்பு உள்ளிட்ட சுமார் 5000 புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 


புத்தக கண்காட்சி 30/07/2021 முதல் 10/08/2021 வரை மக்கள் மற்றும் புத்தக ஆர்வலர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் செஞ்சி தமிழினியன், திருமதி. R.பாக்யஸ்ரீ, திரு. எ.பூவழகன், திரு. சுடரொளி சுந்தரம், புலவர். கோ.தமிழரசன் திரு. வீ.சக்திராஜன், செல்வி. சு.இளவரசி, திரு. அ.கமலக்கண்ணன், திரு. மா.சேகர், கவிஞர். செந்தில்பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 இடம்: தமிழ்திருமகள் திருமண மண்டபம் செஞ்சி.

Post a Comment

புதியது பழையவை