Top News

தேசிய புத்தக கண்காட்சி அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் பார்வையிட்டார்

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேஷனல் புக் டிரஸ்ட்(இந்தியா புதுதில்லி), தமிழ்நாடு அரசு கிளை நூலகம் செஞ்சி மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் இணைந்து நடத்தும் 35-வது தேசிய புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இப்புத்தக கண்காட்சியை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் பார்வையிட்டார் அப்பொழுது அவர் விரைவில் செஞ்சியில் நவீன வசதிகொண்ட நூலகம் அமைத்துத் தரப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் 

அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் வர்களுக்கு மரியாதை செலுத்தி செஞ்சி கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் எ.பூவழகன் நூலகர், இரா.இராதாகிருஷ்ணன், வே.அன்பழகன், அ.கமலக்கண்ணன் வாசகர் வட்ட துனைத்தலைவர் வரவேற்பு அளித்தனர். செஞ்சி தமிழினியன், துரை, திருநாவுக்கரசு, அ.சிவநாதன் VAO ஓய்வு, மா.சேகர் மேலாளர், மற்றும் நியு சென்சுரி புக்ஸ் ஹவுஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடன் திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 இடம்: தமிழ்திருமகள் திருமண மண்டபம் செஞ்சி.

Post a Comment

புதியது பழையவை