Top News

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு!!

 

மத்திய கல்வித்துறை சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில், தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த Dr.R. ராதாகிருஷ்ணன் அவர்களை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் டில்லி விக்யான் பவனில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி, குடியரசுத் தலைவர் கையால் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் இருந்து மத்தியக் கல்வி அமைச்சகம் விருதுக்கு தகுதியான 44 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி மற்றும் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

புதியது பழையவை