Top News

இந்துக்கள் இடுகாட்டில் குப்பைகழிவுகள், செஞ்சி பேரூராட்சியை கண்டித்து போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இந்து இடுகாட்டு பகுதியில் குப்பைக்கழிவுகள் கொட்டுவதை கண்டித்தும் பள்ளி பகுதி, நீர்நிலை பகுதி மற்றும் சாலையோரங்களில் குப்பைக் கழிவுகளை கொட்டுவதும் அவற்றை தீயிட்டு எரிப்பதும் அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் ஆடு,மாடு மற்றும் கோழி இறைச்சிகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது, இதனால் அவ்வழியாக செல்லும் மக்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதை அறிந்தும், சிறிதும் பொருட்படுத்தாமல் 

குப்பைக்கழிவுகளை கொட்டி வருகிறது செஞ்சி பேரூராட்சி நிர்வாகம், இது பற்றி பல முறை மனுக்கள் கொடுக்கப்படும், செய்திதாள்களில் செய்திகள் வெளியிட்டும், ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியிட்டும், அது மட்டும் அல்லாது செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் (மு.வ.எண். 374/2008) வழக்கின் தீர்ப்பையும் பொருட்படுத்தாமல் 

செஞ்சி பேரூராட்சி அரசு அலுவலகம் அரசியல்வாதிகள் அலுவலகமாக செயல்பட்டு வருவதை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன்பாக வழக்கறிஞர் சமூக நீதிபேரவை, இந்து முன்னனி அமைப்பாளர்கள், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், செஞ்சி பெரியகரம், கிருஷ்ணாபுரம், சிறுகடம்பூர் கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர் சில மணிநேரம் கடந்தும் பேரூராட்சியின் முக்கிய அலுவலர்கள் எவரும் முன்வராமல் இருந்ததால் பேரூராட்சி அலுவலகத்தை பூட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் 

செஞ்சி வட்டாட்சியர் திரு.ராஜன் அவர்கள் போராட்டக்காரர்களை அழைத்து பேரூராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய கோரிக்கைகளை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.


                   செய்தியாளர்: த.மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை