சென்னை கோவிலஞ்செரி (15/8/2021)
அன்னை தெரேசா நகர் குடியிருப்போர் பொது நல சங்கம் இச்சங்கம் தொடங்கி எட்டு மாதகாலம் ஆன நிலையில் சங்கம் சார்பாக ஊரின் அடிப்படை நலத் திட்டம் குறித்து உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற நிகழ்வில் தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறிப்பினர் S.R.ராஜா அவர்களிடம் கோரிக்கை மனுக்கள் வைக்கப்பட்டது இக்கோரிக்கை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் வெளிப்பாடாகவும் நமது இந்திய தாய்த் திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன இவ்விழா தமிழ்தாய் வாழ்த்துடன் சங்க பொருளாளர் திரு M.கதிரவன் அவர்கள் வாழ்த்துரை வழங்க சிறப்பு அழைப்பாளர் மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஊராட்சி கழக செயலாளர் சங்க கௌரவ தலைவர் மதிப்பிற்குரிய திரு.மு வேல்முருகன் BA அவர்கள் தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார் சிறப்புரையில் அன்னை தெரசா நகர் குடியிருப்போர் பொது நல சங்கம் மூலம் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற மனுவில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீதான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நம் தமிழக முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் இந்த ஊருக் கான நலத்திட்டங்களை செய்ய அரசாணை பிறப்பித்துள்ளார் அதன் அடிப்படையில் விரைவில் பணிகள் தொடங்கும் என அவர் தெரிவித்தார்
அரசாணை நகலை இச் சங்கத்தின் தலைவர் டாக்டர் திரு.M. வாஞ்சிநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார் இவ்விழாவில் மதிப்பிற்குரிய முன்னாள் மதுரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.மதி அமுதா வேல்முருகன் MA.ML அவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார் அன்னை தெரசா நகர் குடியிருப்போர் பொது நல சங்க தலைவர் டாக்டர்M.வாஞ்சிநாதன்அவர்கள் வாழ்த்துரை வழங்க செயலாளர் திரு பி செந்தில் அவர்கள் நன்றியுரை வழங்கி நாட்டுப்பண் பாடலுடன் இவ்விழா இனிதே நிறைவு பெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள் மு.நவநிதகிருஸ்ணன், T.குபேரன் ராக்கேஷ் ஷர்மா நகர் குடியிருப்போர் நல சங்கம்
கருத்துரையிடுக