Top News

அமுதம் ரிப்போர்ட்டர் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின கொடி ஏற்றப்பட்டது


 சென்னை 15-08-2021

சுதந்திரத்திற்கு பாடுபட்ட நம் இந்திய தேச விடுதலை வீரர்களை நினைவு கூறும் வகையில்
அமுதம் ரிப்போர்ட்டர்  தலைமை அலுவலகத்தில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இவ்விழாவில் மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் தேசிய தலைவரும் அமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையின்  நிர்வாக உதவி ஆசிரியருமான செல்வாபிரியன் அவர்கள் கொடி ஏற்றி விழாவை தொடங்கிவைத்தார். 
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் தேசிய துணைதலைவரும் அமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையின் இணை ஆசிரியர் அமல்ராஜ், மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் தேசிய துணைச்செயலாளரும் அமுதம் பத்திரிகையின் நிர்வாக மேலாளர் கருப்பையா, அமுதம் ரிப்போர்ட்டர் நிருபர்கள்  தனலட்சுமி, சந்திரசேகர், ஜேக்கப், ஆனந்தசெல்வம், பொன்ராஜ், முருகேஷ், மகேஷ், குமரேசன் மற்றும் வணிகபெருமக்கள் கலந்து கொண்டு 
விடுதலை வீரர்களுக்கு மரியாதைசெய்யும் விதமாக தேசிய கொடிக்கு வீர வணக்கம் செலுத்தி விழாவை சிறப்பித்தனர் மேலும் விழா முடிவில் இனிப்புகள் வழங்கப்பட்டன 
                                                                                        செய்தியாளர் R.வெங்கடேஷ்

Post a Comment

புதியது பழையவை