விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் எண்ணாயிரம் ஊராட்சி
பகுதியில் உள்ள இருளர் குடியிருப்பில் குடிநீர், மின்சாரம், தெருவிளக்கு சாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் வேண்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியார் இடம் மனு கொடுத்தனர்
இதனை பரிசிலனை செய்த மாவட்ட ஆட்சியர் அப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 75வது சுதந்திரதினத்தன்று துரித நடவடிக்கைமேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.மோகன் இ.ஆ.ப அவர்கள் அப்பணிகளுக்கான செயலானை பிறப்பித்தார்,

தங்கள் தேவைகளை நிறேவேற்றிய மாவட்ட
ஆட்சியருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்
மற்றும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும்
அப்பகுதி மக்கள்
உற்சாக வரவேற்பு அளித்தனர், தங்களின் தேவைகளை பூர்த்தி செய்த
மாவட்ட ஆட்சியரை வாழ்த்தி வணங்கினர்.
பொதுமக்களின் வாழ்த்துகளையும், வரவேற்புகளையும் பெற்ற மாவட்ட ஆட்சியர்
சுதந்திர தினத்தன்று நான் ஏற்றிய கொடியை விட இவர்கள் வாழ்ககையில் ஔி ஏற்றி வைத்தது மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன் என மாவட்ட ஆட்சியர் கூறினார்...செய்தியாளர் மு.ஏழுமலை.
கருத்துரையிடுக