Top News

செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த துணை வட்டாட்சியர் மேசையின் மீது இருந்த கண்ணாடி மர்ம நபர்களால் உடைப்பு

 

   விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் மேசையின் மீது இருந்த கண்ணாடி மர்ம நபர்களால் உடைப்பு.

மே -11/2022(காலை) செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பணி அலுவலர்கள் அலுவலகத்தினுள் துணை வட்டாட்சியர் மேசையின் மீது இருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பதறிப் போயினர். வட்டாட்சியர் கண்ணாடியை உடைந்தது யார் என்று தெரியாததால் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். பின்னர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவை ஆய்வு செய்தபோது ஒரு திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. 

கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் இரு நாயார்கள் என்று தெரியவந்தது. மேசையின் மீதிருந்த துணியை இழுத்து விளையாடியதால் மேசையின் மேல் இருந்த கண்ணாடி நழுவி கீழே விழுந்து உடைந்ததுள்ளது.

செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரவு நேர காவலர் இல்லாத காரணத்தால் இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க இரவு நேர காவலரை நியமிப்பாரா மாவட்ட ஆட்சியர்.

Post a Comment

புதியது பழையவை