விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேலச்சேரியில் அமைந்துள்ள வேடியப்பன் ஆலயத்தில் ஸ்ரீ பச்சையம்மன் சமேத மன்னாரீஸ்வரர் மூன்றாம் ஆண்டு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு முன்னதாக பால் தயிர் சந்தனம் பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக செய்து பட்டாடை அணிவித்து பல்வேறு மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியம் இசைக்க, மாங்கல்ய மந்திரம் ஓத பச்சையம்மன் மன்னார் ஈஸ்வரர் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது, விழாவில் திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சென்னை கிஷோர் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் பச்சைசையப்பன் மேஸ்திரி செய்திருந்தார்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக