Top News

பாண்டலம் கோவில் நகர லயன்ஸ் சங்கம் சார்பில், ஆலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா!!

 

பாண்டலம் கோவில் நகர லயன்ஸ் சங்கம் மற்றும் ஆலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூரில் 01/08/2023 அன்று காலை 11 மணியளவில் பாண்டலம் கோவில் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பாக ஆலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா சிறப்பாக நடைபெற்றது. 

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தாய்ப்பால் வார விழா மாவட்ட தலைவர் Lion.M.நூருல்லா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வட்டாரத் தலைவர் Lion.D.சேகர் தாய்ப்பால் முக்கியத்துவம் பற்றி கருத்துரை வழங்கினார். விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரட், பிஸ்கட், ஜூஸ், தண்ணீர் பாட்டில், இனிப்பு, காரம் ஆகியன வழங்கப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தலைவர் Lion.A.R.ஏழுமலை அவர்கள் 5 சேர்கள் வழங்கினார். விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் Dr.M.பாலதண்டாயுதபாணி, மருத்துவ அலுவலர் Dr.R.செந்தமிழ்ச்செல்வி மற்றும் லயன்ஸ் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், மாவட்ட தலைவர், முன்னாள் தலைவர், முன்னாள் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் மருத்துவ செவிலியர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் ஆரோக்கியமான மூன்று குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

செய்தியாளர்:                             மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை