விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், காணை ஒன்றியம் நல்லாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சரின் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" சிறப்பு திட்டத்தின்கீழ் பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ம.ஜெயச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன்,இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன்,இ.வ.ப., காணை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் என்.கலைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக