Top News

செஞ்சி அருகே சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா! தனித்திறன், கலைநிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் அசத்தல்!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை சார்பில் இன்று பள்ளி ஆண்டுவிழா தலைமை ஆசிரியர் ஜீவேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் பள்ளி மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி, கவிதை வாசித்தல், பாடல் பாடுதல், நாடக கலை, தற்காப்பு கலை என பல்வேறு தனித்திறன் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைக்களை வெளிப்படுத்தினர்.

இதில் சிறப்பு அழைப்பார்கள் ஊராட்சி மன்ற தலைவர் அபர்ணா ரவிசங்கர், ஒன்றிய கவுன்சிலர் டிலைட் ஆரோக்கியராஜ், துணை தலைவர் சித்ரா ரவி ஆகியோர் கலந்து கொண்டு 2022-2023 ம் கல்வியாண்டில் 10, 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்கள், 6 முதல் 12ம் வகுப்பு வரை முழு வருகை புரிந்தவர்கள், NCC, NSS, Scout, NGC மற்றும் 2023-2024 ம் ஆண்டு தனித்திறன் கலைநிகழ்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் கோமதி, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள், சத்துணவு பொருப்பாளர்கள், சமயல் மற்றும் தூய்மைபணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்:             மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை