விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கெங்கவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் செவிலியர் குடியிருப்பு கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு ரூ. 33.00 லட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்பு கட்டிடம் காட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் யோகப்பிரியா, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுகுமார், ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி பொற்ச்செழியன், ஒன்றிய கவுன்சிலர் சத்யா கார்த்திகேயன், மருத்துவ செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக