Top News

வல்லம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், ஜெயலலிதா 76-வது பிறந்த நாள் விழா!

 

விழுப்புரம் மாவட்டம் வல்லம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையில், முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று வல்லம் ஒன்றியம் மேல்களவாய் கூட்டுச்சாலையில் அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வல்லம் முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் பரிமளா பன்னீர், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சேட்டு, ஒன்றிய துணை செயலாளர் அமிர்தகுமாரி ராஜா, மாணவரணி ஒன்றிய செயலாளர் பொண்ணுசாமி, பென்னகர் கிளை செயலாளர் தமிழ்வேந்தன், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் கலைவாணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்:               மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை