மேல்மலையனூர்: பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள்! அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார்!!

மேல்மலையனூர்: பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேவனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 235.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உண்டு உறைவிடப் பள்ளி (Access Building - NSCBAV) கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை, 

மேல்மலையனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 21.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு வகுப்பறை கட்டிடம் காட்டுவதற்கான பூமி பூஜை மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுபாண்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு மொத்தம் ரூ. 2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டிலான கட்டிட பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மேல்மலையனூர் வட்டார கல்விக் குழு தலைவர் எல்.பி நெடுஞ்செழியன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் தன்மேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசண்முகம், சையத் முகமது, வட்டாட்சியர் முகமது அலி, மாவட்ட கவுன்சிலர் செல்வி ராம சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவனூர் சாந்தி சக்திவேல், மேல்மலையனூர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் யசோதா சந்திரகுப்தன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேவனூர் இரா. அண்ணாமலை, மேல்மலையனூர் பரந்தாமன், உண்டு உறைவிடப் பள்ளி பொருப்பாசிரியர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்:              மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை