விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய கல்விக்கடன் முகாமினை கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன் தொடங்கி வைத்து கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, கல்விக் கடன் உதவிகளை வழங்கினார்.
உடன் மாவட்ட துணை பொது மேலாளர்(வளர்ச்சி) பாலமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஸ்வரன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக