திண்டிவனத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செய்தியாளர்களுக்கான குழு காப்பீடு பத்திரம் வழங்கும் விழா ஜூலை 28 ஞாயிறன்று திண்டிவனம் புறவழிச் சாலை அருகே உள்ள ஆர்யாஸ் தனியார் உணவகத்தில் நடைபெற்றது.
விழாவானது சங்கத் தலைவர் முருகன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் தங்கவேலப்பன், இணை ஒருங்கிணைப்பாளர் பழனி முன்னிலை வகிக்க, செயலாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்புடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், பெலாக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவருமான பூங்கா. பாக்யராஜ் கலந்துகொண்டு
பத்திரிக்கையாளர்களுக்கு குழு காப்பீடு பத்திரம் வழங்கி, சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சங்க பொறுப்பாளர்கள் முல்லை குமார், வெங்கடேஸ்வரராவ், சங்கர்கணேஷ், தாண்டவமூர்த்தி, முருகையன், மோகன், சையத்ரபி, பரத், ரவி, பார்த்தசாரதி, சரண்ராஜ், ஜெயச்சந்திரன், சண்முகம், வீடியோ சண்முகம், சுதாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சங்க ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். நிறைவாக துணை செயலாளர் கோகுல்ராஜ் நன்றி உரையுடன் விழா சிறப்பாக நிறைவுற்றது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக