Top News

செஞ்சி அடுத்த காரிமங்கலம் கிராமத்தில், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோயில்களில் ஜீர்னோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், கிராம தேவதை ஸ்ரீ ரேணுகாம்பாள், வரதராஜப் பெருமாள், ஏரி கோடி விநாயகர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு ஜீர்னோதாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 10-ஆம் தேதி ஆனி 26-ஆம் நாள் புதன்கிழமை காலையில் மங்கல இசை கணபதி வழிபாட்டுடன் லட்சுமி பூஜையும், சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் முதல் கால யாக பூஜையும், தீப ஆராதனையும் நடைபெற் றது. ஜூலை 11, வியாழக்கிழமை இரண் டாம் கால யாக வேள்வி, வேத திருமுறை பாராய ணம், பூர்ணாஹுதி, சாமிக்கு கண் திறத்தல், சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாத்துதலும், மாலையில் மகா கணபதி பூஜை, யாகசாலை பிரவேசம், கன்னிகாபூஜை, வேத திருமுறை பாராயணம், மூன்றாம் கால யாகபூஜைகளும், பல்வேறு சிறப்பு யாகமும் நடைபெற்றது.

ஜூலை 12, வெள்ளிக்கிழமை இன்று காலையில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கோபூஜை மற்றும் நான்காம் காலபூஜையும் 10.00 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், புனிதநீர் கலசம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயகர், கிராம தேவதை ஸ்ரீ ரேணுகாம்பாள், வரதராஜப் பெருமாள் மற்றும் ஏரி கோடி விநாயகர், கங்கை அம்மன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு ஜீர்னோதாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடு களை விழா குழுவினர்கள், அனைத்து உபயதாரர்கள், இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை