தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் மே 20/2025 செவ்வாய்க்கிழமை அன்று 1434 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது.
இந்த வருவாய் தீர்வாயம் மே 21 முதல் 30 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் நடைபெறுகிறது மேலும் இந்நாட்களில் பொதுமக்கள் தங்கள் குறைகளை குறிப்பிட்டு அவரவர் கிராம வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரில் மனு தரலாம். இந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருவாய் தீர்வாயத்தில் இன்று வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் திண்டிவனம் சார் ஆட்சியரான திவ்யான்ஷூ நிகம் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும் நேற்றைய தினம் பெறப்பட்ட மனுக்களில் சில மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கினார். நிகழ்வில் வட்டாட்சியர் செல்வக்குமார் உள்ளிட்ட வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக