Top News

செஞ்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்! 4 பேர் படுகாயம்!!

 

செஞ்சி அடுத்த NR பேட்டையில் செப்டம்பர் 2, வெள்ளிக்கிழமையன்று இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 4 நபர்கள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நரசிங்கராயன்(NR) பேட்டை செஞ்சி - விழுப்புரம் மாநில நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது,

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த செஞ்சி காவல்துறையினர் விபத்தில் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு 108 அவசர ஊர்தியில் செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் படுகாயம் அடைந்த நபர்களுக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் சோ.குப்பம் கிராமம், சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அருண்(25) சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும்,

பலத்த காயமடைந்த குறிஞ்சிப்பை கிராமம், மலைக்கு போகும் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சிரஞ்சீவி(25) முன்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, அத்தியூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெரிய தம்பி மகன் சேகர்(56) புதுவை ஜிம்பர் மருத்துவமனை, வெளாமை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நவீன்(19) திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கும் அவசர ஊர்தியில் அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து செஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை