வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் பாரம்பரிய நடை 2024 எனும் மரபு நடை நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டம் சார்பில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியானது 18 செப்டம்பர் 2024 புதன்கிழமை தொடங்கி 21 செப்டம்பர் 2024 சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. இதன் முதல் நாள் நிகழ்வாக செஞ்சி வட்டார பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரபு நடை நிகழ்ச்சி திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷூ நிகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த மரபு நடை நிகழ்வில் செஞ்சி பகுதியில் உள்ள செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, சாணக்கியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, வித்தியா விகாஸ் மேல்நிலை பள்ளி உள்ளிட்ட
மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆசிரியரின் வழிகாட்டுதலில் செஞ்சி கோட்டையை சுற்றி பார்த்தனர்.
அப்பொழுது அவர்களுக்கு கோட்டையில் உள்ள தர்பார் மண்டபம், கல்யாண மஹால், உடற்பயிற்சி கூடம், குதிரை லாயம், யானை கூடாரம், நெற்களஞ்சியம், வெடி மருந்து கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றி காண்பித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தாங்கள் பார்த்த புராதான நினைவுச் சின்னங்கள் பற்றி மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர்.
நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியர் பிரேமி(பயிற்சி), மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பார்கவி, மாவட்ட கல்வி அலுவலர் சுமதி(பொறுப்பு), மாவட்ட தொடக்க கல்வி அலுவளர் அருட்செல்வி(பொறுப்பு), மாவட்ட பள்ளி கல்வி ஆய்வாளர் வினாயகமூர்த்தி, துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக