விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கீழ்மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவினாயகர், ஸ்ரீனிவாசபெருமாள் அம்மச்சார் அம்மன் ஆலய புணராவர்த்தன ஜீர்ணோத்தாரன அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை மண்டபம் அமைத்து கணபதி ஹோமம், கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமம், கலச பிரதிஷ்டை, விசேஷ சாந்தி, பூர்ணாஹதி உள்ளிட்ட ஹோம பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் காலை 6.30 மணி மங்கள மேள வாத்தியம் இசைக்க புனித நீர் கலசங்கள் ஸ்ரீசெல்வவினாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசபெருமாள் ஆலய விமானங்களுக்கு கொண்டு வரப்பட்டு விசேஷ பூஜைகள் செய்து கோபுர கலசம், மூலவ மூர்த்திகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி தீபாராதனை ஏற்றப்பட்டது.
தொடர்ந்து யாக பூஜைகள் செய்து மங்கள மேள வாத்தியத்துடன் கும்ப கலசங்கள் அம்மச்சார் அம்மன் ஆலய விமானத்திற்கு கொண்டுவரப்பட்டு விசேஷ பூஜைகள் செய்து புனித நீரானது கோபுர கலசம், மூலவர் அம்மாச்சார அம்மன் பரிவார தெய்வங்கள் மற்றும் நவகிரகங்களுக்கு ஊற்றி மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. புனிதநீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடு முன்னாள் தொடர்வண்டி துறை மத்திய இணை அமைச்சர் ஏ. கே. மூர்த்தி, கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் குழுக்கள் செய்திருந்தனர்.
கருத்துரையிடுக