Top News

செஞ்சி: ஸ்ரீ சுந்தரவிநாயகர் ஆலயத்தில் நவராத்திரி திருவிளக்கு பூஜை திருவிழா! ஒன்பதாம் நாள் சரஸ்வதி சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன்!!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தரவிநாயகர் ஆலயத்தில் 32 ஆம் ஆண்டு நவராத்திரி விழா விமர்சையாக நடைபெற்றது.

நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 17(அக். 03) வியாழக்கிழமை அன்று தொடங்கி 10 நாள் நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் விநாயகர், அம்மன், கோமாதா, விவசாயி, அனைத்து வாழ்வியல் உள்ளிட்ட பல்வேறு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஆலயத்தினுள் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து ஆராதனையும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

விழாவில் ஒன்பதாம் நாள் புரட்டாசி மாதம் 25(அக். 11) வெள்ளிக்கிழமை இன்று ஆலயத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சரஸ்வதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை