இந்த தகவல் அறிந்து நாங்கள் அவரிடம் கேட்டபோது விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் ஆனாங்கூர் ஊராட்சியில் கடந்த 2021ல் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 362 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் தான் சங்கிதா ஏழுமலை என்றும் இவர் பழங்குடி இருளர் இன வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அதே ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவர் சித்ரா, அவரது கணவர் குணசேகர், 2வது வார்டு உறுப்பினர் சுதா, அவரது கணவர் சரவணன் ஆகிய நால்வரும் ஊராட்சி மன்ற தலைவராகிய சங்கிதாவை சாதிய பெயரை சொல்லி மிரட்டுவதும், ஊராட்சி பணிகளை செய்ய விடாமல் தடுப்பதும், ஊராட்சி மன்றத் தலைவரின் முழுபொருப்பையும் இந்த நால்வரும் ஆக்கரமித்து கொண்டு அவர்களே கையொப்பம் இடுவதும், ஊராட்சி அலுவலகத்தினுள் நுழைய விடாமல் அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்து சென்று விடுவதும் இது போன்ற முறையற்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவளர், மாவட்ட ஆட்சியர், மற்றும் தலைமை செயலகம் போன்ற இடங்களில் புகார் மணு கொடுத்துள்ளதாகவும் அதுமட்டுமல்லாது செப்டம்பர் 1ம் தேதி செஞ்சி காவல் நிலையத்திலும் இந்த 4 நபர்கள் மீது சாதியை சொல்லி வன்கொடுமை செய்வதாக கூறி புகார் அளித்தேன் ஆனால் மனுவின் மீது அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அக்டோபர் 2, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை அவர் புறகணித்ததாகவும் தெரியவந்தது.
மேலும், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டத்தை பறக்கணிக்கிறேன் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் எதிரே அவர் கையில் பதாகையுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரிடம் விசாரணை செய்துள்ளனர் அப்போது அவர் தான் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், தன்னை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உட்பட 4 பேர் சாதியை சொல்லி வன்கொடுமை செய்வதாக கூறி செப்டம்பர் 1ம் தேதி செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும், இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து விசாரணைக்காக ஊரக வளர்ச்சித் துறையினர் அவரை அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாது விழுப்புரம் காவல் துறையினர் அனுமதியின்றியும், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் செய்ததக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
இது குறித்து செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், செஞ்சி காவல் சரக துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் பாதிப்புக்குள்ளான ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா அவர்களை அழைத்து விசாரணை செய்து அவர் அளித்த புகாரின் பேரில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா, அவரது கணவர் குணசேகர், 2வது வார்டு உறுப்பினர் சுதா, அவரது கணவர் சரவணன் ஆகிய 4 பேர் மீது வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார் என தொரியவந்தது.
கருத்துரையிடுக