Top News

 செஞ்சி அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற திரௌபதி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வீரணாமூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முன்னதாக யாக சாலை அமைத்து சித்திரை 19, சனிக்கிழமையன்று மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, லஷ்மி பூஜை, முதற்கால யாக வேள்வியும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சித்திரை திங்கள் 20ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை இரண்டாம் கால யாக வேள்வி, மூல மந்திர மகா ஹோமங்களும் தீபாராதனையும், யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலச புறப்பாடும் நடைபெற்றது.

தொடர்ந்து புனித நீர் கலசங்கள் விமான கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து மங்கள மேள வாத்தியம் இசைக்க பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கரகோஷத்துடன் விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா தீபாராதனை ஏற்றப்பட்டது. 

தொடர்ந்து விமான ரதம் கொடிமரம் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவில் வீரணாமூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீது மகா கும்பாபிஷேக புனித நீரானது தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாட்டினை வீரணாமூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை