விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சந்தைமேடு பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு சத்திய மங்களம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முலம் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம் முகாமை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அவர்கள் துவக்கிவைத்தார். இம்முகாமில் சார் ஆட்சியர் S.அனுஸ்ரீ IAS, வருவாய் வட்டஆட்சியர் ஆர்.கோவிந்தராஜ், செஞ்சி சட்டமன்ற உரிப்பினர் கே.எஸ்.மஸ்தான், ஆகியோர் கலந்துகொண்டனர்.
இம்முகாமில் பழங்குடியின மக்களுக்கு யோகா மற்றும் இயற்க்கை மருத்துவ பயிற்சி, தோல் நோய் சிகிச்சை, கர்பிணி பெண்களுக்கான பரிசோதனை, காசாநேய் சிகிச்சை போன்ற பல நோய்களுக்கான பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் மேலும் சிகிச்சை பெறுவதற்க்கான மருத்துவ அட்டை வழங்கப்பட்டது
இந்த சிறப்பு மருத்துவமுகாம் டாக்டர் P.மலர்விழி வட்டார மருத்துவ அலுவளர், அவர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இம்முகாமில் சத்தியமங்கள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கந்துகொண்டனர். இம் முகாமில் ஏராளமான பழங்குடியினர் கலந்துகொண்டனர்
கருத்துரையிடுக