Top News

கல் குவாரியில் கல் சரிந்து ஒருவர் பலி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்காவை சேர்ந்த செ.பூதூர் கிராமத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. இந்த தனியார் கல்குவாரி உரிமம் பெற்ற உரிமையாளர் வேம்பி கிராமத்தை சேர்ந்த  தனலட்சுமி என்பவரிடம் இருந்து மதுரையை சேர்ந்த அன்புசெல்வன் என்பவர் இந்த கல்குவாரி குத்தகை எடுத்து நடத்திவருகிறார். இந்த கல்குவாரியில் 10க்கும் மேற்ப்பட்டோர் வேலைபார்த்து வந்தனர். (20-02-2020) அன்று 10.30 மணியளவில் கம்பரஸர் முலம் பாறையை துளையிடும்போது அதிர்வின் முலம் மேலேயிருந்த கல் சரிந்து விழுந்ததில் முட்டத்தூரை சேர்ந்த பூங்காவனம் மகன் ராமகிருஷ்ணன் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



இந்த செய்தியை கேட்டறிந்த கிராமபொதுமக்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.



இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்ஆய்வாளர் ஜோதி, உதவி ஆய்வாளர் ஜெயபால், வருவாய் கோட்டாச்சியர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இறந்தவரின் மனைவி மற்றும் உறவினர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு இழப்பிடு பெற்றுதருமாரு கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்றுகொண்ட அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு முன்டையம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டது


Post a Comment

புதியது பழையவை