Top News

நடுவநந்தல் கிராமத்தில் மயானகொள்ளை


விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனம் வட்டம்  நடுவனந்தல் கிராமகுளக்கரையில் அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில்  மாசி 18ம் நாள் மயானகொள்ளை விழா வெகுசிறப்பாகநடைபெற்றது. இவ்விழாவில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு. சந்தனக்காப்பு அலங்காரம், செய்து தீபாராதனை ஏற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்காளம்மன் ஆலயத்திலிருந்து. அக்னி கரகம், பூ கரகம்,ஆடுமகரகம்,சிலம்பாட்டம்,சிம்மவாகனத்தில்மகிஷாசுரசம்ஹாரத்துடனமும்மும் கொண்ட ஆதிபராசக்தியாய் அமர்ந்து பூம்பாறை, காளி வேஷம், பாவாடைராயன், ஆண்பூதம், பெண்பூதம், குறத்தி வேடத்துடன் பம்பை, உடுக்கை, நாதஸ்வரமேளம்,   


 


நையாண்டிமேளம், இசைக்க  பக்தர்கள்  நடனமாடியபடி மயானத்திற்கு சென்றனர். அங்கு மண்ணால் உருவாக்கப்பட்ட வல்லாளகண்டன் உருவபொம்மை செய்யப்பட்டு கொழுக்கட்டை சுண்டல் காய்கறி  படையலிட்டு அங்காளி ஆவேசத்துடன் மயானகொள்ளை கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். மக்களின் பாதுகாப்புக்காக காவல்துறையினர் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.


                                                   செஞ்சி செய்தியாளர் T.மதியழகன்



Post a Comment

புதியது பழையவை