Top News

சுயநலம் இல்லா தொண்டு

 


குறள்


இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.


பொருள்


ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.



கொரோனா அச்சுருத்தலால் மக்கள் நலன் கருதி மத்திய மாநில அரசுகள் 21 நாள் ஊரடங்கு பிறப்பித்தது. தற்ப்போது மக்களின் அன்றாட வாழ்வாதரத்திற்க்கான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால் மக்களின் அடுத்தகட்ட பொருளாதர நிலை என்ன? அது குறித்து எந்த அரசியல் தலைவரும் பேசுவது கிடையாது  தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று மக்கள் தவித்துவரும் நிலையில் தமிழகத்தில்  தன்னார்வளர்கள் பொதுநல நோக்கோடு தற்போது சூழ்நிலை அறிந்து உண்ண உணவில்லாமல் தவித்துவரும் மக்களை அறிந்து அவர்களுக்கென உண்டான உதவி செய்து வருகின்றனர்..திருவள்ளுவர் மாவட்டம்  அமுதம் ரிப்போர்ட்டர் சார்பிலும் அப்தூல்கலாம் சமுகசேவையாளர்கள் நற்பணி மன்றத்தின் சார்பிலும் நமது மாவட்ட நிருபர் K. சேகர் அவர்களின் தலமையில் மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட .சமுக ஆர்வளர்கள் சண்முகம் மற்றும் கிளாட்சன் ஆகியோரால்.



திருவள்ளுவர் மாவட்டம்  திருவேற்காடு , குமணன்சாவடி, கரையான்சாவடி, மற்றும் சென்னீர்குப்பம் போன்ற இடங்களில் அங்குள்ள மக்களுக்கு  உணவு வழங்கப்பட்டது.


 


Post a Comment

புதியது பழையவை