Top News

செஞ்சியில் சட்டத்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சாலைகள், மற்றும் கனிமவளத்துறை மாண்புமிகு அமைச்சர் சி.வி சண்முகம் அவர்கள் கொரோன தொற்று குறித்து தீவிர ஆய்வை மேற்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைப்படி விழுப்புரம் மாவட்டத்தில் கோவிட்-19 144 தடை உத்தரவு காரணமாக மாற்றுதிறனாளிகளுக்கு அனைத்து உதவிகளும் தடை இன்றி கிடைத்திட மாவட்டநிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிகைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் திரு ஆ..அண்ணாதுரை இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.தமிழகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு மாநில ஆணையர் அவர்களின் தலமையில் மாற்றுதிறனாளிகள் மற்றும் மூத்த மாற்றுதிறனாளிகள் போன்றவர்களுக்கு உதவிகள் கிடைத்திட இலவச அழைப்பு எண் 180042500111 மற்றும் செவிதிறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வாட்சப் காணெலி அழைப்பு எண் 9700799993 என்ற எண்களில் தொடர்புகொண்டு உதவிகள் பெறலாம்.


தொடர்ந்து இம்மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நாளிலிருந்து தெலைபேசியில் தொடர்புகொண்ட நபர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


கோவிட்-19 உதவி மையங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மாற்றுதிறனாளிகள் நல அலுவளகத்திலும் செயல்பட்டு வருகின்றன. 56 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ 50,000 மதிப்பில் மலிகைபொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.அத்தியாவசி பொருட்கள் கொண்ட 200 பேக்கேஜ்கள் அனைத்து வட்டாச்சியர் அலுவளகத்திற்க்கும் அனுப்பிவைக்க பட்டுள்ளன.



முதலைச்சர்  அவர்களின் ஆணைப்படி மாற்றுதிறனாளிகள் நலத்துறை மூலம் ரூ 1500 பராமரிப்பு உதவிதொகை பெறும் 6258 பயனாளிகளுக்கு ஏப்ரல், மே க்கான உதவித்தொகை பயனளிகளின் வங்கி கணக்கில் 9-04-2020 அன்று போடபட்டது என மாவட்ட ஆட்சியர் கூறினார்.மேலும் மனநலகாப்பகத்தில் உள்ள 147 மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுதிரனாளிகளுக்கு ஆவின் உணவுபொருள் அடங்கிய பெட்டகத்தை சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சாலைகள், மற்றும் கனிமவளத்துறை மாண்புமிகு அமைச்சர் சி.வி சண்முகம் அவர்களால் வழங்கப்பட்டது. உடன்  மாவட்ட ஆட்சியர் திரு ஆ..அண்ணாதுரை இ.ஆ.ப, திண்டிவணம் சார் ஆட்சியர் டாக்டர் அனு இ.ஆ.ப, காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார் இ.கா.ப, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வ.மகேந்திரன்,மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவளர் திரு. குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.



இதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார் அவர்கள் பாதுகாப்பு பணிகுறித்து ஆய்வுகளை மேற்கொன்டார் இனி அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒருவாரத்திற்கு 3 வார்டுகள் மட்டுமே அனுமதி கிராமங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு 6 விதமான வர்ணங்கள் தீட்டப்படும் வர்ணம் தீட்டப்பட்ட வாகனம் ஒருமுறை மட்டுமே அனுமதி திரும்பவும் வந்தால் வாககனம் பறிமுதல் செய்து வழக்கு போடப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்  


Post a Comment

புதியது பழையவை