Top News

மயிலம் சட்டமன்ற அலுவலகத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மக்களுடன் அமர்ந்து குறைகளை கேட்ட சட்டமன்ற உறுப்பினர்!!

 

விழுப்புரம் மாவட்டம் மைலம் சட்ட மன்ற அலுவலகத்தில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் திரு C.சிவகுமார் MLA அவர்கள் தேசியக்கொடி ஏற்றினார் பின்னர் தேசிய கொடிக்கு மயிலம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொகுதி மக்கள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர் இதனை தொடர்ந்து மயிலம் சட்டமன்ற உறுப்பினர் C.சிவக்குமார் MLA அவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர் சட்டமன்ற அலுவலகத்தில் தனது தொகுதி மக்களை சந்தித்தார் அப்போது அவர் தொகுதி மக்கள் யாரும் எதிர்பாராதவிதமாக 

அவர்களுடன் தரையில் அமர்ந்து குறைகளைக் கேட்டறிந்தார் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார்  அவரின் அந்தச் செயல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மக்கள் வியப்பில் அதற்கான காரணம் குறித்து நம்மிடம் பேசிய மயிலம் சட்டமன்ற உறுப்பினர், `எனக்கு வாக்களித்த மக்கள் மனுக்களுடன் என்னைச் சந்திக்க வந்தார்கள், அவர்களில் வயதில் பெரியவர்களும் நிறையபேர் இருந்தார்கள் அவர்களை நிற்கவைத்துப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை மனதுக்குள் நெருடலாக இருந்தது, அவர்கள் அனைவரையும் அமரவைப்பதற்கான அதிக இருக்கைகளும் என் அறையில் இல்லை, அதனால் அனைவரையும் தரையில் அமரவைத்துவிட்டு நானும் அவர்களுடன் அமர்ந்தேன் என்றார். மேலும் `உங்களில் ஒருவன்தான் நான், நீங்கள் கொடுத்த வேலையைச் செய்ய வந்தவன்தான் நான், அதனால் எந்தவித பயமுமின்றி என்னிடம் பேசுங்கள்' என்று கூறி அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளையும் கேட்டறிந்தேன். மக்களும் சட்டமன்ற உறுப்பினர் என்ற தயக்கமின்றி என்னிடம் சக மனிதர்களைப் போல் தங்கள் குறைகளைக் என்னிடம் கூறினார்கள். நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற ஆணவம் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். மக்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன். அவர்களிடம் கெஞ்சி, கூத்தாடி இதைச் செய்து கொடுக்கிேறேன் அதைச் செய்து கொடுக்கிேறேன் என்று கூறித்தான் வாக்குகளை வாங்கினேன் என்பதை மறந்துவிடக் கூடாது, அதனால் அவர்களில் ஒருவனாக இருந்துவிட்டால் யாருக்கும் எந்த இன்னல்களும் இருக்காது" என்று அவர் கூறினார்.

Post a Comment

புதியது பழையவை