விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெரிய அகரம் காந்தி கடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய 75-ம் ஆண்டு லட்சதீப திருவிழாவின் 18-ம் ஆண்டு ஏழாம் நாள் இளைஞர்கள் திருவிழாவான ஊஞ்சல் உற்சவ திருவிழா 20/04/2022 புதன்கிழமை அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஊஞ்சல் திருவிழாவை முன்னிட்டு விநாயகருக்கு கலை முதலே பால், தயிர், பழம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து சந்தனக் காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரியகரம் இளைஞர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 6 மணியளவில் உற்சவ மூர்த்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகரம் இளைஞர்கள் மூலம் தோலே (தோல்மீது) வீதியுலா மேளதாளம் இசைக்க வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தாலாட்டு பாட்டு இசைக்க உற்சவ மூர்த்தி ஊஞ்சலில் சேவைசாதித்து 108 மங்கையர்களுக்கு மாங்கல்ய நாண் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகள் இலட்சதீப 7 -ம் நாள் ஊஞ்சல் உற்சவ விழாக்குழு இளைஞர்கள், பெரியகரம், செஞ்சி.
கருத்துரையிடுக