Top News

சத்தியமங்கலத்தில், விழுப்புரம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் ரூபாய் 2 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டிடங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்!!

விழுப்புரம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் சனவரி 29, அன்று செஞ்சி, மயிலம், திண்டிவனம், ஆகிய தொகுதிகளில் வட்டார பொது சுகாதார மருத்துவமனைகட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சிகள் செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி தலைமையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா . சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு சத்தியமங்கலம், அனந்தபுரம், அனுமந்தை, ஓமந்தூர், ஒலக்கூர், கோவில் புறையூர், மேல் ஒளக்கூர், பாங்கொளத்தூர், வைரபுறம், புறங்கரை, ஆகிய இடங்களில் வட்டார பொது ஆரம்ப சுகாதார நிலையம், கூடுதல் புறநோயாளிகள் பிரிவு, செவிலியர் குடியிருப்பு மற்றும் துணை சுகாதார நிலைய கட்டிடங்களைதிறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

சிறப்புரையில் தமிழ்நாடு முதலமைச்சராக தளபதி மு. க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டு காலத்தில் மருத்துவத்துறையில் புதிய புதிய திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் 48, கலைஞரின் வருமுன் காப்போம், இதயம் காப்போம், சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த ஆறு திட்டங்கள் உலக அளவில் வேறு எங்கும் இல்லாமல் தமிழகத்தில் மட்டும் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களைத் தேடி மருத்துவத்திட்டமான மகத்தான திட்டத்தில் இதுவரை 1 கோடியே 72 ஆயித்தது 583 நபர்கள் இத்திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சிகரமான பணியாக உள்ளது. இன்னுயிர் காப்போம் 48 திட்டத்தின் மூலம் விபத்துகளில் உயிர் பெற்றவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்து 965 பேர் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக காப்பாற்றுவதற்காக ஒரு லட்சம் ரூபாய் மருத்துவமனைக்கு அரசு கொடுத்துள்ளது அவ்வகையில் அரசுக்கு ஆகின்ற செலவு 185 கோடியே 36 லட்சம் ரூபாய் ஆகும்.

இது போன்ற மகத்தான திட்டம் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா .சுப்ரமணியன் பெருமைபட தெரிவித்தார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்,இரண்டு நபர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், ஒன்றிய பெருந்தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், மேல்மலையனூர் கண்மணி நெடுஞ்செழியன், வல்லம் அமுதா ரவிக்குமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி, சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எல். அபர்ணா ரவிசங்கர், சத்தியமங்கலம் வருவாய் ஆய்வாளர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கிராம நிர்வாக உதவியாளர் டோமினிக் சாவியோ, ஒன்றிய கவுன்சிலர்கள் டிலைட், கேமல், புவனா செந்தில்குமரன் மற்றும் மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதி நிகழ்வாக சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் யோக பிரியா நன்றியுரை வழங்கினார்.

மாவட்ட செய்தியாளர்:             மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை