விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 4 நாள் தொடர் விடுமுறைக்கு பின் இன்று ஒரே நாளில் விவசாயிகள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொண்டு வந்துள்ளனர்.
இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்கொண்டு விவசாயிகளின் நெல் மூட்டைகளை அடுக்குவதற்கு போதிய இடவசதியின்மையாள் 31/01/2024 அன்று காலை 3 மணிக்கு மேல் விவசாயிகள் தங்கள் நெல்மூட்டைகளை கொண்டுவரலாம் எனவும், இதற்கு முன்னதாக கொண்டு வருபவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக