Top News

தீவனூர் பொய்யாமொழி வினாயகர் ஆலயத்தில், தை மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சனவரி 29, தை மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. 

இதனை முன்னிட்டும மூலவர் சுயம்பு பொய்யாமொழி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் உற்சவர் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவ மூர்த்திக்கு அடுக்கு தீபம், கும்ப தீபம், பஞ்சமுக திபாரதனை, கற்பூர ஆரத்தி, சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரங்கள் ஆகியவை காண்பிக்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டினை N.சகுந்தலா அம்மாள் N.மணிகண்டன் பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்:             மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை