Top News

மேலச்சேரி ஊராட்சியில், 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம்!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் மேலச்சேரி ஊராட்சியில் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் ஆணைப்படி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் மணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கிராம சபை கூட்டத்தில் அனைவரின் முன்னிலையில் ஊராட்சி செயலர் வெங்கடேசன் 01/04/2023 முதல் 31/12/2023 வரை நடைபெற்ற திட்டப்பணிகள் குறித்த வரவு, செலவினையும், இந்த ஆண்டு செயல்படுத்துவதற்கான ஜல்ஜீவன் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட 17 தீர்மானங்களும் கிராம மக்களுக்கு வாசிக்கப்பட்டது.

நிகழ்வில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜீவா தயாளன், கிராம நிர்வாக அலுவலர் வின்சென்ட், பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டாள், கால்நடை மருத்துவர் நிர்மல்ராஜ், ஊரக வளர்ச்சி பற்றாளர் மலர்கொடி, நெடுஞ்சாலை துறை அலுவலர் இளமதி, மக்கள் நல பணியாளர் நெடுஞ்செழியன், சுகாதார செவிலியர் சந்திரா, வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு கருதி செஞ்சி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்:               மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை