Top News

செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் வழிபாட்டு மன்றம் சார்பில், நாட்டு நலப்பணி திட்ட (NSS) மாணவர்களுக்கு பாராட்டு விழா!

செஞ்சி இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 75 வது குடியரசு தின விழாவில் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) மாணவர்களுக்கு வீர ஆஞ்சநேயர் கோவில் வழிபாடு மன்றம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

பாராட்டு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கோ.கணபதி தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். செஞ்சி கோட்டையின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஜனவரி முதல் நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதில் அனைவருக்கும் ஆஞ்சனேயர் வழிபாட்டுமன்ற விழா குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் செஞ்சி இராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (NSS) மாணவர்கள் விழா குழு நிர்வாகிகளோடு இணைந்து அன்னதானம் வழங்கும் பணியினை சிறப்பாக மேற்கொண்டனர். இதனை கெளரவிக்கும் வகையில் இன்று குடியரசு தின விழாவில் வீர ஆஞ்சநேயர் வழிபாட்டுமன்ற விழா குழு தலைவரும், விழுப்புரம் மாவட்ட கவுன்சிலருமான அரங்க ஏழுமலை நாட்டு நலப்பணித் திட்ட (NSS) மாணவர்களை பாராட்டி சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசு வழங்கி கௌரவித்து சிறப்புறையாற்றினார். 

நிகழ்வில் செஞ்சிக்கோட்டை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் விழா குழுவினர் வல்லம் ஒன்றிய அதிமுக செயலாளர் விநாயகமூர்த்தி, வழக்கறிஞர் சக்திராஜன், எவரெஸ்ட் செல்வம், தினமலர் செய்தியாளர் சரவணன், தினபூமி செய்தியாளர் அனுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதி நிகழ்வாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஏழுமலை நன்றி உரை வழங்கினார்.

மாவட்ட செய்தியாளர்:               மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை