விழுப்புரம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செஞ்சியில் தனியார் திருமண மண்டபத்தில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு 765 பயனாளிகளுக்கு 2 கோடியே 95 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், சிறு பான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 48 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 462 ரூபாய் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களை வழங்கி சிறப் புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, செஞ்சி வருவாய் வட்டாட்சியர் ஏழுமலை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக