விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழாவினை தொடர்ந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வளத்தி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு 10 நரிக் குறவர்கள், 10 திருநங்கைகள், 124 பழங்குடியினர் உட்பட 512 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டா வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் முகம்மது அலி, ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்பிரமணியம், செல்வி ராமசரவணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக